ஒரே நேரத்தில் 19 மாநிலத்தின் 110 இடங்களில் CBI சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நேரத்தில் நாட்டின் 19 மாநிலங்களின் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தனித்தனி வழக்குகள், சில ஊழல் வழக்குகள் , சில ஆயுதங்களை கடத்துவதில் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற பல்வேறு விதமான வழக்குகளுக்கான சோதனைகளை சிபிஐ ஒன்றாக சேர்ந்து 110 இடங்களில் நடத்தி வருகின்றது.

இந்த சோதனை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 110 இடங்களில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. CBI சோதனைகள் அனைத்தும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால் அதற்கான பலன் கிடைக்கும் என்றும் , ஒவ்வொன்றாக நடத்தப்பட்டால் இதன் மூலம் மற்ற குற்றவாளிகள் உஷாராகி தங்களுடைய தடையங்களை மறைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்த சோதனை ஒரே நடைபெறுகின்றது.