திருச்சியில் கோலாகலம் ….கலைக்கட்டியது சித்திரை தேரோட்டம்!!

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று,  ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக கிளிமாலை கொண்டு வரப்பட்டது. இதை  அணிந்த படி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி  அருளினார் .

திருச்சி தேரோட்டம்  ஸ்ரீரங்கம் க்கான பட முடிவு

 

அப்போது ,பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா’ என  பரவசத்துடன் தேரை  இழுத்து தரிசனம் செய்தனர்.திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது .