‘சித்தி 2’ சீரியல்… ராதிகாவுக்கு பதில் இவங்களா?… தீயாய் பரவும் தகவல்…!!!

சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகியதால் அவருக்கு பதில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் பரவி வருகிறது .

சினிமாவில் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் தயாராவது போல் சமீபகாலமாக ஹிட் அடித்த சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் அதிகம் தொடங்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஹிட் அடித்த சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது . முதல் பாகத்தில் நடித்த ராதிகா இரண்டாவது பாகத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென இந்த சீரியலில் இருந்து ராதிகா விலகிவிட்டார் . இதையடுத்து அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது .

Image result for ramya krishnan

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஏற்கனவே சன் டிவியில் சில சீரியல்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மீனாவுக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . இவர்களில் யார் சித்தி-2  சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *