மதிய உணவாக சப்பாத்தியும் உப்பும்… வைரலான வீடியோ உண்மையா..?? யோகி ஆதித்யநாத் விளக்கம்..!!

உத்திரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மதிய உணவாக கொடுக்கப்பட்டது போன்ற வைரலான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 உத்திரபிரதேச மாநிலத்தில் குக்கிராமம் ஒன்றில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவாக சப்பாத்தி மற்றும் உப்பை மாணவர்களுக்கு வழங்கப்படும் காட்சியை செய்தியாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலை தளத்தில் கடந்த மாதம் பதிவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் மாநில அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இதனிடையே வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image result for சப்பாத்தி உப்பு மதிய உணவு

இதுகுறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி சித்தரிக்கப்பட்ட வீடியோவை வடிவமைத்து எடுத்துள்ளதாக யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார். மேலும் மாணவர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு கச்சிதமாக வீடு எடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், மதிய உணவு வழங்கப்படும் நேரமும் வீடியோ எடுக்கப்பட்ட நேரமும் ஒன்றா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

Image result for சப்பாத்தி உப்பு மதிய உணவு

மாணவி ஒருவர் கையில் துடப்பம் ஒன்றை கொடுத்து பள்ளியை கூட்டுமாறு செய்தியாளர் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அரசை விமர்சனம் செய்பவர்கள் ஆரோக்கியமான முறையில் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Image result for yogi adityanath

மேலும் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீர் செய்து தங்கள் அரசின் பெரிய சாதனையாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். தங்கள் மாநிலத்தில் வகுப்புவாத கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும், மத விழாக்கள் அமைதியாக நடைபெறுகின்றன என்றும் மற்ற மாநிலங்களுக்கு தாங்கள் ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் கொண்டு தெரிவித்துள்ளார்.