அதிபர் டிரம்ப் விடுதிக்குள் நுழைய முயன்ற சீன பெண் கைது…..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஓய்வு விடுதிக்குள் கணினிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் சாப்ட்வேருடன் உள்ளே  நுழைய முயன்ற சீனப் பெண் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஒய்வு விடுதி  புளோரிடாவின் Palm கடற்கரையில் உள்ளது. இந்நிலையில் சீனப்பெண் ஒருவர்  கடந்த சனிக்கிழமையன்று  கடற்கரை  பகுதிக்கு சென்று நடக்காத ஒரு நிகழ்ச்சியின் பெயரை சொல்லி விடுதிக்குள் நுழைய முட்பட்டதாக கூறப்படுகிறது . அந்த சமயம் அதிபர் டிரம்ப், தனது விடுதியின் உள்ளே  இருந்தார்.

Image result for (Zhang yujing

இந்த நிலையில், அப்பெண்ணின் விவரங்களை சரிபார்க்கையில் அவர் கூறிய தகவல் பொய் எனத்தெரிய வந்தது. உடனே  அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்தப் பெண் சீனாவைச் சேர்ந்த ஸங் யுஜிங் (Zhang yujing) எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணிடம்  இருந்து கணினிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் சாப்ட்வேர், மற்றும் இரு பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.