ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசின் நடவடிக்கையால், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய 370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.

மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி சீனாவுக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக ஆதரவு கோரியது. மேலும் பல்வேறு நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டதோடு , உலக நாடுகளை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனது. இதற்கான வேலையில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஈடுபட்டு வருகின்றார்.
மேலும் காஷ்மீர் தொடர்பான பிரச்சனையை ஐ.நா விவாதிக்க வேண்டும் , இதில் ஐ.நா தலையிட வேண்டுமென்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து நேற்று ஐ.நா_வின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடைபெற்றது.மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐநாவின் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரிட்டன், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் ஜம்மு விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்றும் ,ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிடக்கூடாது. என்று ரஷ்யா வலியுறுத்தியது. அதே போல இதில் பேசிய ஐ.நா.வுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் கூறுகையில் , இந்திய அரசின் நடவடிக்கையால், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீன இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.