“இந்தியாவின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட சீன மின்திட்டம்!”… என்ன காரணம்…? வெளியான தகவல்…!!

இந்தியாவின் எதிர்பால், 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள் நிறுவும் திட்டத்தை சீன நிறுவனம் ரத்து செய்திருக்கிறது.

இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலிருக்கும் நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவ சீன நாட்டின் சினோ சோர் ஹைபிரிட் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த மூன்று தீவுகளும் தமிழகத்திற்கு அருகில் உள்ளது. எனவே, பாதுகாப்பிற்காக இந்தியாவின் தரப்பில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சீன நிறுவனமானது, இந்த மின் திட்டங்களை கைவிடுவதாக தெரிவித்திருக்கிறது. இது குறித்து கொழும்பில் இருக்கும் சீன தூதரகம் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, இலங்கையின் மூன்று வடக்கு தீவுகளில் மின் திட்டங்களை ஆரம்பிக்கும் பணி மூன்றாம் தரப்பினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பதால் ரத்து செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறது. இதில், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், இந்தியா எதிர்த்ததனால் தான் இந்த மின் திட்டத்தை சீன நிறுவனம் கைவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *