மத்திய சீனாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டு ஒன்று தென் சீன கடலை கண்காணிப்பதற்கான மூன்று உளவு செயற்கைக்கோள்களை விடுவித்த பிறகு கடந்த 8 ஆம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தின் வான் பரப்பில் வந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இதே போல் தற்போது உளவு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட சீனாவின் ராக்கெட் நேபாளத்தின் வான் பரப்பிற்குள் வந்து எரிந்ததாக அமெரிக்க கடற்படை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை இயற்பியலாளர் ஜோனார்தன் கூறியதாவது “மத்திய சீனாவில் இருந்து ஏவப்பட்ட சாங் செங் 2d லாங் மார்ச் என்ற ராக்கெட் உளவு செயற்கை கோளை விடுவித்த பிறகு சுமார் 200 நாட்கள் விண்வெளியிலேயே இருந்துள்ளது. அதன் பின் கடந்த சனிக்கிழமை அன்று வளிமண்டத்திற்குள் வந்து நேபாள நாட்டு வான் பரப்பிற்குள் நுழைந்து தீப்பிடித்து எறிந்தது” என்று அவர் கூறியுள்ளார்.