கொரானாவை கட்டுப்படுத்தியது “இந்த மருந்துதான்”..! சீனா அறிவிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.

 

இந்நிலையில் தீவிரமடையும் COVID -19 வகை கொரானா வைரஸுக்கு  ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir  என்ற மருந்து கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பதாக  சீனா அறிவித்துள்ளது.

இந்த மருந்தால்  சீனாவில் கொரானாவால் பாதிக்கப்பட்ட 340 பேர் முற்றிலும்  குணமாகி  இருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Favipiravir என்ற மருந்து கொடுக்கப்பட்டதால் நுரையீரல் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.