சீனா தேவை இல்லை ”உடனே வெளியேறுங்கள்” டிரம்ப் ஆவேசம் …!!

சீனா தேவை இல்லை என்றும் , சீனா_வை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமடைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா_வுக்கும் , சீனா_வுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகின்றது. தற்போது இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் இரு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு வரும் அந்தந்த நாடுகளின் பொருட்களுக்கு மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்க விதிக்கின்றது.

இதற்கு பதிலடியாக சீன நிதியமைச்சகம் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 5 ஆயிரத்து 78 பொருட்களுக்கு 5_தில் இருந்து 10 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்ப்புடைய  அமெரிக்க பொருட்களுக்கு 5_திலிருந்து  10 சதவிகிதம் வரை வரியை  உயர்த்தி செப்டம்பர் முதல் அமுலாகும் என்பதால் அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் கடும் சரிவை கண்டன.

சீனாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அமரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ,சீனாவில்    இயங்கி வரும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே அந்நாட்டை வீட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.  இனிமேல் சீனா தேவை இல்லை என்று சாடிய டிரம்ப் , சீனா_வால் எங்களுக்கு ஆண்டுதோறும் அதிகமான  அமெரிக்காவின் பணம் செலவாகின்றது.  எனவே அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு பதில் மற்றொரு இடத்தைத் தேட தொழில் தொடங்க உள்ளதாகவும் டிரம்ப் தனது ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.