அமெரிக்க நாட்டில் தி டிப்ளோமட் என்ற பத்திரிக்கையில் மு சுன்ஷான் பத்திரிக்கையாளர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் பெயரானது |சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது” என்பதாகும். சீன நாட்டில் டுவிட்டரை போன்று ‘சீனா வெய்போ’ என்ற சமூக வலைதளம் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை 58 கோடி 20 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பிரதமர் மோடி “மோடி லவோக்சியன்” என்ற பட்டப் பெயருடன் சீன நெட்டிசங்களால் அழைக்கப்படுகின்றார். அதற்கு மோடி அறிவில்லாதவர் என்று அர்த்தமாம்.
அது மட்டுமல்லாமல் மற்ற தலைவர்களை விட மோடி மிகவும் அற்புதமானவர் என்று சீன நெட்டிசங்கள் நினைக்கின்றனர். குறிப்பாக மோடி தலைமையிலான இந்தியா மற்ற பெரிய நாடுகளிடையே சம அந்தஸ்தை பராமரித்து வருகின்றது. அவர் பின்பற்றும் கொள்கைகள் இந்தியாவின் முந்தைய கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இது குறித்து இந்த கட்டுரையை எழுதிய மு சுன்ஷான் கூறியதாவது “என்னுடைய 20 வருட பத்திரிக்கை அனுபவத்தில் எந்த வெளிநாட்டு தலைவரையும் சீன நெட்டிசன்கள் புகழ்ந்து பார்த்ததில்லை. இது மிகவும் அற்புதமான அனுபவம். மோடி அந்த அளவுக்கு உலக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றே கூற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.