“குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிக குறைவு “அமைச்சர் பேட்டி ..!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் பல்வேறுவிதமான நோய்களால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது .குறிப்பாக  வயிற்றுப்போக்கு காரணமாக 13 சதவீதம் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இதனை தடுக்கும் விதமாக இன்று முதல் கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் ,அதில் குழந்தை பராமரிப்பு, சுகாதாரம், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு முறை உள்ளிட்ட தகவல்களை தாய்க்கு கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.