சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமிக்கும், ராஜேந்திரனுக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த தாந்தோனிமலை சமூக நல அலுவலர் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக ராஜேந்திரனை கைது செய்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரனின் தந்தை கோவிந்தராஜ் தாய் வள்ளியையும் மற்றும் சிறுமியின் பெற்றோர் உட்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.