“கிணற்றில் குளித்த மாணவன் பலி “

கோத்தகிரி  வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது.

சண்முகம் இவர் கோத்தகிரி அருகில் உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் ஆறு வயது.  இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

சக்திவேல் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் விளையாடசென்றுள்ளான் . ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக்திவேலின் பெற்றோர் அவனை பல  இடங்களில் தேடிப் பார்த்துள்ளன . அப்போது அந்த இடத்தில் உள்ள ஊருக்குச் சொந்தமான பத்து அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுவன் மிதந்துள்ளான் .விளையாடி கொண்டிருந்த போது சிறுவன் தன்னை அறியாமல்  தவறி கிணற்றில் விழுந்துவிட்டான். இதன் பிறகு அவனது பெற்றோர்களும் அந்தப்பகுதிமக்களும் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில்அனுமதித்தனர் . அங்கு சிறுவனை பார்த்த  டாக்டர்கள் அச்சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .