முதல்வர் தொடர்ந்த வழக்கு….. TTV தினகரன் மீது குற்றசாட்டு பதிவு…..!!

முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டிடிவி தினகரன் எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது . 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாகவும் , மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை அதிமுகவின் தலைமை அலுவலத்தில் சிலை வைக்கப்பட்டது பற்றி சர்சையான கருத்துக்களை தெரிவித்ததாக முதலமைச்சர் சார்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது . நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்த TTV . தினகரனிடம் நீதிபதி குற்றச்சாட்டுகளை வாசித்தார் . அப்போது TTV.தினகரன் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு ,  தனக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காகவே இந்த வழக்கு செய்திருப்பதாகவும்  தெரிவித்தார் . இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் மாதம் 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.