“ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு” தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பேச்சு…!!

ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படுமென்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து , தொகுதி பங்கீடு , வேட்பாளர் அறிவிப்பு என தற்போது வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு

இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கட்சி சார்பில் போட்டியிடும் வட சென்னை தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது வடசென்னை  திருவொற்றியூரில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய தமிழக முதல்வர்  மக்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளார். அதில் அவர் சென்னையில் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் , மக்களவை தேர்தல் முடிந்த பின்பு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.