75 ஆவது சுதந்திர தின விழா…. பதவியேற்று 100 வது நாளில் கொடியேற்றும் வாய்ப்பு…. மிகுந்த மகிழ்ச்சியில் முதல்வர்….!!

முதல்வராக பதவியேற்ற 100 -வது நாளிலேயே 75ஆவது சுதந்திர தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

75 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமரும், ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர்களும் கொடி ஏற்றி விழாவை சிறப்பிப்பது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் முதல்முறையாக முதல்வர் பதவியில் இருக்கும் ஸ்டாலினுக்கு கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 100 -வது நாளில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இதனையடுத்து இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு என பிரம்மாண்டமாக குடியரசு தின கோட்டை கொத்தளத்தில் நடைபெறும்.

கடந்த 1997ஆம் ஆண்டு ஸ்டாலினின் தந்தை மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் முதல்-அமைச்சராக பதவியில் இருந்தார். அப்போது 50-ஆம் ஆண்டு சுதந்திர தின பொன்விழா மிகவும் பெரிய அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சரியாக 25 வருடங்கள் கழித்து 75 ஆவது சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் வாய்ப்பு அவரது மகனான ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *