கலெக்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர உத்தரவு..!!!

நிலுவையில் உள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எந்தெந்த திட்ட பணிகள் நிறைவேறாமல் இருக்கிறது, அவற்றின் நிலையை அறிந்து செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்ட ஒழுங்கை பாதுகாப்பது முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் வந்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.