தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு களம் கான்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திமுக தலைவர் முக.ஸ்டாலின் . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது .

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்த நிலையில் எந்தெந்த கூட்டணியில் போட்டியிடுகிறார்கள் என்று இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படுகின்றது . தேமுதிக போட்டியிடுவதாக கேட்கும் தொகுதிகளை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் இன்னும் அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்காமல் உள்ளது.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் வைத்து தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். முதலில் அதிமுக_வின் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி விஜயகாந்தை சந்தித்த அன்றே பாமக நிறுவனர் ராமதாஸ்சும் சந்தித்தார். அதை தொடர்ந்து நேற்றைய தினம் தாமாக தலைவர் G.K வாசன் சந்தித்து பேசினார். சந்தித்த அனைவருமே செய்தியாளர்களிடம் உடல்நலம் குறித்தும் , மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.