உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை இல்லை முக்கிய வழக்குகளை நீதிபதி வினித் கோத்தாரி அமர்வில் முறையிடலாம் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றுவதற்காக உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த தலைமை நீதிபதி தஹில்ரமணி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் நீதிபதி தஹில்ரமணி அமர்வில் விசாரணை தொடர்பான பட்டியலிதப்பட்ட 75 வழக்குகள் நேற்று விசாரிக்க வில்லை.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் பதிவு பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணை ஏதும் இருக்காது எனவும் , ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் இரண்டாவது நீதிபதிகளான நீதிபதி வினித் கோத்தாரி தலைமையில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே முக்கிய வழக்குகள் அவசர முறையீடு தொடர்பான வழக்கை நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் முறையிடலாம் என்று உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.