தலைமை தேர்தல் அதிகாரி மாநில தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகின்றார் ….!!

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார் .

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல்  விதிமுறைகள்  கடைபிடிக்கப்பட்டு வருகின்றது . இந்நிலையில் மாநிலம் முழுவதுமே போலீசார் வாகனகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் 50,000 மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டுவருவதை பறிமுதல் செய்கின்றனர்.இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா வீடியோ காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார்.

Image result for சுனில் ஆரோரா

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்  பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இதில் மக்களவைத் தேர்தலில் பண புழக்கத்தை கட்டுப்படுத்துவது ,  தேர்தலை வெளிப்படையாக நடத்துவது பதட்டமான  தொகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது போன்ற முக்கிய பிரச்சினை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தேர்தல் ஆணையர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார்.