தலைமை தேர்தல் ஆணையர் இன்று தமிழகம் வருகை….!!

முக்கிய ஆலோசனைகள் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகின்றனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழு இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர். இந்தக் குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

தேர்தல் ஆணையர் சுனில் அரோரா க்கான பட முடிவு

மேலும் தமிழகத்தில் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகளுடன் நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகின்றனர். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், அனைத்து மாவட்டங்களின்  தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.