அப்பூருவர் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை தொடக்கம்…. கதிகலங்கும் சிதம்பரம் குடும்பத்தினர்…!!

INX மீடியா வழக்கில் அப்பூருவர் ஆன இந்திராணி முகர்ஜியிடம் மும்பை சிறையில் வைத்து விசாரணை நடைபெற இருக்கிறது.

2007 ஆம் ஆண்டு இந்திராணி பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 350 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை ஈட்டியது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வலியுறுத்தலின் பெயரில் மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் முறைகேட்டிற்கு உதவியதாகவும் இதற்கு பிரதிபலனாக கார்த்திக்கு லஞ்சப்பணம் பல்வேறு வழிகளில் கைமாறி உள்ளதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டாகும்.

Image result for indirani mukerji

இந்நிலையில் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் தற்போது சிறையில் உள்ள இந்திரா முகர்ஜி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஜூலையில் அப்ரூவராக மாறி உள்ளார். மேலும் பா.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தது தொடர்பான விவரங்களையும் விசாரணை அமைப்புகளிடம் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது வாக்கை பதிவு செய்த இந்திராணி முகர்ஜி, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவரது அலுவலகம் சென்று தானும் தனது கணவர் பீட்டர் முகர்ஜியும் சந்தித்ததாக கூறியிருந்தார்.

Image result for indirani mukerji

அந்த சந்திப்பில் ஐஎன்எக்ஸ் மீடியா வெளிநாட்டு முதலீட்டை திரட்டுவது ஒப்புதல் வழங்குவதற்கு கைமாறாக தனது மகன் கார்த்திக் தொழிலிலுக்கு உதவுமாறும், வெளிநாடுகளில் அதிக பணத்தை வழங்குமாறும் சிதம்பரம் கேட்டுக் கொண்டதாகவும் இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார். இதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி சிபிஐ கடந்த மாதம் சிதம்பரத்தை கைது செய்து விசாரித்து தற்பொழுது பா சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Image result for indirani mukerji

போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடுகள் தொடர்பாக சில நிதி பரிவர்த்தனைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டியது இருப்பதால் இந்திராணி முகர்ஜியை மும்பை சிறையில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ மும்பை சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இருந்தது. இதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது எனவே சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் உடைய நிதி பரிவர்த்தனைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.