சுவையான கொண்டை கடலை புலாவ் செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி- 2 கப்
கொண்டை கடலை- 1 கப்
வெங்காயம்- 2
தக்காளி- 2
தண்ணீர்- 4 கப்
பச்சை மிளகாய்- தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது- 2 டேபிள்ஸ்பூன்
தயிர்- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
சீரகம் – 1/4 ஸ்பூன்
பட்டை – 1/4 ஸ்பூன்
கிராம்பு – 1/4 ஸ்பூன்
ஏலம் – 1/4 ஸ்பூன்
பி ரிஞ்சி இலை – சிறிதளவு
வெண்ணெய் – தேவையானஅளவு

செய்முறை:
முதலில் கொண்டை கடலையை 8 மணி நேரம் வரை ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். குக்கரில் வெண்ணெய் போட்டு சீரகம் , பட்டை, கிராம்பு , ஏலம் ,பி ரிஞ்சி இலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி கொள்ள வேண்டும். பின் இஞ்சி,பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி மற்றும் தயிர் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் வேக வைத்துள்ள கொண்டை கடலை , தேவையான அளவு உப்பு , கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு , ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து இறக்கினால் சுவையான கொண்டை கடலை புலாவ் தயார் !!!