பார்த்தாலே சுவைக்கத் தூண்டும் சிக்கன் பொடிமாஸ் !!!

சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2  கிலோ

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு  விழுது  – 1 டீஸ்பூன்

பட்டை, லவங்கம், ஏலக்காய், கிரம்பு –  தலா  1

முட்டை – 1

மஞ்சள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2  டீஸ்பூன்

கரம் மசாலா – 1  டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

Chicken podimas க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் சிக்கனுடன்   சிறிதளவு உப்பு ,  மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள் , இஞ்சி பூண்டு விழுது  ஆகியவற்றை சேர்த்து  இரண்டு விசில் வரும் வரை வேக  விட வேண்டும். பின்னர்  சிக்கனை பொடியாக  நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் ,வெங்காயம் சேர்த்து ,வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் , கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.  இதனுடன்   தக்காளி , கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ,  பின் சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும். இதில்  முட்டையை  உடைத்து  ஊற்றி கிளறி ,கொத்தமல்லி இலை  தூவி இறக்கினால்  சுவையான  சிக்கன் பொடிமாஸ் தயார்!!!