கோழிக்கறி….. சாப்பிட்டு நிரூபித்தால்…… ரூ1,00,00,000 பரிசு….. கோழி பண்ணையாளர் சங்க நிர்வாகி அறிவிப்பு…..!!

கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா நோய் வரும் என நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும்  என்பதை நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு தருவதாகக் கூறி கோழி பண்ணையாளர்  சங்க நிர்வாகி சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த மாதத்தில் இந்தியாவில் கொரோனா  வைரஸ் கோழிக்கறி மூலமாகத்தான் பரவுகிறது என்று சிலர் வதந்தி பரப்பி வந்தனர்.

வதந்தி பரப்பிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும், அந்த வதந்தியால் கோழி முட்டை ரூபாய் 1.50 விலைக்கு குறைந்ததாகவும் கோழிக்கறியின் விலை ரூபாய் 50 குறைந்ததாகவும் வேதனை தெரிவித்தார். ஆகையால் கோழிக்கறி சாப்பிடுவதன் மூலமாக கொரோனா வரும் என நிரூபிப்பவர்களுக்கு கட்டாயம் ரூபாய் ஒரு கோடி பரிசு உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.