தங்கக் கம்மலை விழுங்கிய கோழி… கதறி அழுத தோழி… ஒரு பாசப் போராட்டம்….!!

தங்கக் கம்மலை விழுங்கிய கோழி  மருத்துவ சிகிச்சையில் உயிரிழந்ததால் அதன் உரிமையாளர் கதறி அழுதது நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார்.இவர் கடந்த ஆண்டு ஒரு நாட்டுக் கோழியை வாங்கி அதற்கு பூச்சி என்று பெயர் வைத்து அதை பாசத்துடன் வளர்த்து வந்தார். அவரது சகோதரியின் மகள் தீபாவுக்கும் கோழியின் மீது எக்கச்சக்க பாசம். தீபா வீட்டில் இருக்கும் நேரங்களில் கோழியிடம் உற்ற நண்பராகி விடுவார்.கோழியும் தீபாவை சுற்றி சுற்றிவரும் இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபா தான் அணிந்திருந்த கம்மலை கழற்றி வைத்துவிட்டு தலைவாரிக் கொண்டிருக்கிறார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவரைச் சுற்றிக் கொண்டிருந்த கோழியை கம்மலை இறை என நினைத்து கொத்தி விழுங்கியுள்ளது.

Image result for தங்கக் கம்மலை விழுங்கிய கோழி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா சிவக்குமாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.அவரை சமாதானப்படுத்திய சிவகுமார் கோழியை அண்ணாநகரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் சென்றுள்ளார். மருத்துவர் கோழியை ஸ்கேன் செய்து பார்த்ததில் கோழியின் இரைப்பையில் கம்மல் இருப்பது தெரியவந்தது.எனவே கோழிக்கு அறிவை சிகிச்சை செய்து கம்மலை எடுக்க முடிவு செய்தனர்.பின்னர் கோழிக்கு முன் மயக்க மருந்து கொடுத்தும் , சுவாசத்திற்கு செயற்கை சுவாச கருவி பொருத்தியும் அறுவை சிகிச்சை தொடங்கியது.

Image result for தங்கக் கம்மலை விழுங்கிய கோழி

கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் கோழியின் இரைப்பையில் இருந்த கம்மல் எடுக்கப்பட்டது.ஆனால் அறுவை சிகிச்சையின் போதே கோழி பரிதாபமாக இறந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்ததை  தொடர்ந்து தீபாவும் , சிவகுமாரும் கதறி அழுதுள்ளனர். பின்னர் கோழியை சொந்த நிலத்திலேயே அடக்கம் செய்தனர். அப்போது எங்களுக்கு அந்த கம்மல் முக்கியம் இல்லை கோழியின் உயிர் தான் முக்கியம் என்று கூறியதது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.