பாய் வீட்டு பிரியாணி போல சுவையான பிரியாணி வீட்டிலையே செய்யலாம் வாங்க ….

தேவையான பொருள்:

பட்டை கிராம்பு ஏலக்காய் ,அரைத்த பட்டை கிராம்பு ஏலக்காய், தயிர் ,இஞ்சி சாரு ,பாஸ்மதி அரிசி, சிக்கன், பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்துமல்லி மற்றும் புதினா, மிளகாய் தூள், நெய்,எண்ணெய், எலுமிச்சைச் சாறு

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்க வேண்டும் .பின் பெரிய வெங்காயத்தை சேர்க்கவேண்டும் .வெங்காயமானது நன்றாக வேக வேண்டும் ,பின்பு உப்பு சேர்க்க வேண்டும் .வெங்காயத்தை மூடிவைத்து வேகவைக்கவேண்டும் .பின் இஞ்சி சாறு சேர்த்து கிளற வேண்டும் ,சிக்கனை சேர்க்கவேண்டும்.

சிக்கன் பத்து நிமிடம் வரை வேக வேண்டும் பின் தக்காளி ,புதினா, கொத்தமல்லி ,மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள், மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும். மசால் நன்றாக பத்து நிமிடம் வரை வேக வேண்டும், பின் தயிரை சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறை ஊற்ற வேண்டும் .உங்களிடம் பாதாம் ,முந்திரி இருந்தால் அதை பால் ஊற்றி அரைத்து சேர்த்துக்கொள்ளலாம் .இதை சேர்த்தால் மிகவும் அருமையாக இருக்கும் .அதிகமாக சேர்க்கக் கூடாது. பாதாம் முந்திரியை ஐந்து சேர்த்தால் போதும் .சிறிது தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும் .

பின்மற்றொரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை வேகவைத்து அரிசி 50% வேக வைத்தால் போதும். பின் சிக்கனில் பாசுமதி அரிசியை சேர்த்துக் கிளற வேண்டும் .குங்குமப்பூ பால் சேர்க்க வேண்டும். இதை சேர்த்தால் பிரியாணிக்கு நிறத்தைக் கொடுக்கும் .சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். 15 நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான சிக்கன் பிரியாணி தயார்.