“சேப்பாக்கம் மைதானம்”…. மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த எம்.எஸ் தோனி…. வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31-ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. ஐபிஎல் தொடருக்காக அனைத்து வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை அடிக்கடி வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் இருக்கைக்கும் எம்.எஸ் தோனி மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் அபி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)