கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை..!!

கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. 

ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸெல் 50* (44) ரன்கள் குவித்தார்.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.சென்னை அணியில் அதிகபட்சமாக பாப் டு பிலெசிஸ் 43* (45) ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

இப்போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன்  8 புள்ளிகள் பெற்று அதிக ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. சென்னை அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன்  8 புள்ளிகள் பெற்று ரன்ரேட் குறைந்து 2 வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் 6 போட்டியில் 5 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளியது..