“சென்னை TO அரக்கோணம்” புதிய மின்சார ரயில் சேவை… மகிழ்ச்சியில் பயணிகள்..!!

சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் புதிய மின்சார ரயில் இயக்கப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரக்கோணம் வரை நவீன வசதிகளை கொண்ட மின்சார ரயில் இயக்கப்பட்டது. 8 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயில் நவீன எலக்ட்ரானிக் முறையில் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான இருக்கை வசதிகள் சிசிடிவி கேமராக்கள் ஜிபிஎஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன பயோ-டாய்லெட் தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் நவீன வசதியுடன் செயல்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.