சென்னை அணி அபார பந்து வீச்சு….. கொல்கத்தா அணி பரிதாப தோல்வி..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி  17.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 

ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள்மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸெல் 50* (44) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், 3 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக பாப் டு பிலெசிஸ் 43* (45) ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். மேலும் அம்பத்தி ராயுடு 21, சேன் வாட்சன் 17, சுரேஷ் ரெய்னா 14, கேதார் ஜாதவ் 8* ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன் 2 விக்கெடுக்குகளும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் வீழ்த்தினார். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.