தொடக்க வீரர்கள் ஏமாற்றம்……சென்னை அணி 5 ஓவர் முடிவில் 27/3….!!

தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் சென்னை அணி 5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 27 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

12 ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் 8 மணிக்கு  தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களான சேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் களமிறங்கினர்.

இருவரும் தொடக்கத்தில்  மெதுவாக ஆடி வந்த நிலையில்  ராயுடு 1 ரன்னில் ஜோப்ரா வீசிய  2வது ஓவரில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடிபட்டார் . இதையடுத்து ரெய்னா, வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். 3வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை வாட்சன் சிக்ஸர் அடித்து அதே ஓவரில் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து கேதார் ஜாதாவும் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். கேதார் ஜாதவ் 2 பவுண்டரி அடித்த நிலையில் 8 (3) ரன்களில் ஆட்டமிழந்தார்.. தற்போது தோனியும், ரெய்னாவும் விளையாடி வருகின்றனர்.