பொறுப்பான ஆட்டத்தில் சென்னை அணி……. 15 ஓவர் முடிவில் 99/4…..!!

 சென்னை அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 99 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

12 ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் 8 மணிக்கு  தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களான சேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் களமிறங்கினர்.இருவரும் தொடக்கத்தில்  மெதுவாக ஆடி வந்த நிலையில்  ராயுடு 1 ரன்னில் ஜோப்ரா வீசிய  2வது ஓவரில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடிபட்டார் .

இதையடுத்து ரெய்னா, வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். 3வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை வாட்சன் சிக்ஸர் அடித்து அதே ஓவரில் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேதார் ஜாதாவும் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். கேதார் ஜாதவ் 2 பவுண்டரி அடித்த நிலையில் 8 (3) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் டோனி களமிறங்கினார். தோனியும், ரெய்னாவும் பொறுமையாக ராஜஸ்தான் பந்து வீச்சை எதிர் கொண்டு விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதையடுத்து ரெய்னா 33 ரன்களில் உனத்கட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பிராவோ களமிறங்கினார். தோனியும், பிராவோவும் விளையாடி வருகின்றனர்.