தாஹிர், ஜடேஜா சுழலில் சுருண்ட டெல்லி…. சென்னை அணி முதலிடம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது 

ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் சுஜித் பந்து வீச்சில் அக்சர் பட்டேல் வசம் பிடிபட்டார். அதன் பிறகு அதிரடியாக விளையாடி ரெய்னா 37 பந்துகளில் 59 ரன்கள்   (8 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார்.

Imageஅவருடன் இணைந்து பாப்  டுபிளெசிஸ்  39 (41) ரன்களும் எடுத்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் தோனி 22 பந்துகள் 44* ரன்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரி),  ஜடேஜா  25 (10) ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் சுஜித் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், அக்சர் பட்டேல் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Image

இதையடுத்து 180 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்விஷாவும், ஷிகர் தவனும் களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே பிருத்விஷா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயரும், ஷிகர் தவனும் இணைந்தனர். இந்த ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அதன் பிறகு தவன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Image

அதை தொடர்ந்து  ரிஷப் பண்ட் 5, கோலின் இங்ரம் 1, அக்சர் பட்டேல் 9, ரூதர் போர்டு 2, மோரிஸ் 0, என வந்த வேகத்தில் அடுத்தடுத்து நடையை கட்டினர். அதன் பிறகு சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும்   31 பந்துகள் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த சுஜித் 6, மிஸ்ரா 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இறுதியில் 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Image

இதனால் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.