சேன் வாட்சன் அதிரடி…..சென்னை அணி சூப்பர் வெற்றி…. புள்ளி பட்டியலில் முதலிடம்!!

ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது. 

ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ஹர்பஜன் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மனிஷ் பாண்டேவும், டேவிட் வார்னரும் சிறப்பாக விளையாடினர்.

அதன் பிறகு வார்னர் 57 (45) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர்  26 ரன்கள் எடுத்தார்.கடைசி வரை ஆடிய மனிஷ் பாண்டே 49 பந்துகள் 83* ரன்களும்  (3 சிக்ஸர், 7 பவுண்டரி),  யூசுப் பதன் 5*  ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளும், தீபக் சஹர்  1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதையடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். பாப் டுபிலஸி 1 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு வந்த ரெய்னாவும், வாட்சனும் தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினர். அதன்பின் இருவரும் அதிரடி காட்டினர்.

இதையடுத்து ரெய்னா 38 (24) ரன்கள் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடுவும்,  வாட்சனுக்கு இணைந்தனர். ராயுடு ஒருபக்கம் பொறுமையாக விளையாட மறுபுறம் வாட்சன் அதிரடி காட்டினார். இதையடுத்து  சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 18 வது ஓவரில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் (6 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

அதன் பின் ராயுடுவும் கடைசி ஓவரில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.   இறுதியில் 19.5 ஓவரில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேதார் ஜாதவ் 11* ரன்களிலும், பிராவோ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணியில்  புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத்கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளி பட்டியலில் முத்தாலிடத்திற்கு முன்னேறியுள்ளது..