இன்றைய ஐபிஎல் போட்டி : மும்பையை பழி தீர்க்குமா சென்னை.?

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது 

ஐ.பி.எல் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் அதன் சொந்த மண்ணில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி அதனுடைய சொந்த மண்ணில் வெல்லும்  வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

Imageமுதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள்  பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் ஒவ்வொரு அணியும் போட்டி போடுகின்றன. முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு இரண்டு  வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் அந்த இடத்திற்கு போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே சென்னை அணி பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிட்டது. முதல் இரண்டு இடத்திற்கு முனைப்பு காட்டி வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பி வந்த நிலையில் வாட்சன் கடந்த போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் விளாசி பார்மில் உள்ளார். பவுலிங்கில் தீபக் சஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

Image

மும்பை அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும், 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. இன்னும் 4 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் 2ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விடும். 5 நாள் இடைவெளிக்கு பின் உத்வேகத்துடன்   இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. இரு அணிகளும்  சம பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சீசனில் சென்னை அணி இதுவரை அதன் சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 5 போட்டியிலும் வென்று உள்ளூரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.