சென்னை அணி பொறுப்பான ஆட்டம்….. 10 ஓவர் முடிவில் 71/1…..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 71 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலெசிஸும், சேன் வாட்சனும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாவிளையாடி நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பின் வாட்சன் 26 (24)  ரன்களில் அஷ்வின் பந்து வீச்சில் சாம் கர்ரன் வசம் பிடிபட்டார். இதையடுத்து சுரேஷ் ரெய்னாவும், பாப் டுபிலெசிஸும், ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர்.