சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்துள்ளது.
ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு பிளெஸி அதிரடி காட்டினார். ஆனால் வாட்சன் 7 ரன்னில் ஏமாற்றமளித்தார்.
அதை தொடர்ந்து அதிரடியாக அதிரடியாக விளையாடி வந்த டு பிளெஸியும் 55 பந்துகளில் 96 ரன்கள் (10 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். மொஹம்மது சமியின் கடைசி ஓவரில் அம்பத்தி ராயுடு 1, கேதார் ஜாதவ் 0 என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அந்த ஓவரில் சென்னை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. தோனி 10 ரன்களும், ப்ராவோ 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், மொஹம்மது சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 171 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க கே.எல் ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.