“சென்னை மெட்ரோ நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் “தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை !!…

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையானது இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதன் காரணமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்து 8 ஊழியர்களும் கோயம்பேடு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களது உறவினர்களும் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் திடீரென சில இடங்களில் சிக்னல் பிரச்சனைகள் எழுந்தது அதன்பின் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதின் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் ஏர்போர்ட் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரயில் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது