இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன
ஐ.பி.எல்லில் இன்று 5ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2வது போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி அணியின் ரிசப் பன்ட் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அபாயகரமாக ஆடி அதிரடி அரைசதம் விளாசினார். அதே போல் சென்னைக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடி ஆட்டம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தவான், ப்ரித்விஷா, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங்கில் அக்சர் பட்டேல், ட்ரெண்ட் போல்ட், ரபாடா ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர்.
நடப்பு சாம்பியன் சென்னை அணியும் முதல் போட்டியில் பெங்களூரு அணியை வென்றதற்கு சிறந்த பந்து வீச்சு தான் காரணம். இந்த வெற்றி பந்து வீச்சுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த போட்டியில் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா, பிராவோ தீபக் சாஹர் என அனைத்து பந்து வீச்சாளர்களும் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். அதே போல் பேட்டிங்கும் நல்ல வலுவான நிலையில் உள்ளது. எனவே இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை 12 வெற்றியும், டெல்லி 6 வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.