மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் கிருஷ்ணகுமார் படேல் மற்றும் அனிதா படேல் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் கிருஷ்ண குமாருக்கு, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அவரது மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த மனைவி கிருஷ்ணகுமாரை பின்பற்றி சென்றுள்ளார். அப்போது கணவர், அவரது காதலியான நீளம் ராஜ்புத் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின் வீட்டை விட்டு வெளியேறும் போது, அனிதா அவரது முன் நின்று கேள்விகள் எழுப்பி உள்ளனர். அப்போது கணவர் இங்கே வைத்து எதுவும் பேச வேண்டாம் வீட்டிற்கு சென்று பேசலாம் என்று கூறியுள்ளார். இதனால் அந்த வாக்குவாதம் கைகலப்பானது. அதோடு அனிதா அந்த வாக்குவாதத்தின் போது நீளம் தனது தங்க செயினை திருடியதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது காதலியும் அனிதாவை சரமாரியாக தாக்கினார்.

இதனை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. வீடியோ வெளியானதும், அனிதா முறைப்படி புகார் அளித்தார். போலீசார் கிருஷ்ணா மற்றும் நீளம் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.