“காவலாளியை திருடன் என்று கோஷமிடுங்கள்” ராகுல் காந்தி மீது வழக்கு…!!

காவலாளி ஒரு திருடன் என்று கோஷம் எழுப்புங்கள் என்று கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றதேர்தலின் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முவைத்தார். மேலும் நான் இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் , நான் ஊழல் செய்யமாட்டேன் , யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற  தன்னுடைய  பிரசாரத்தை முன்வைத்தார். மேலும் மோடி பயன்படுத்திய காவலாளி என்ற சவுகிடார் என்ற ஹிந்தி வார்த்தையை பாஜகவினர் பலரும் பிரபலபடுத்தினர்.

இந்நிலையில் பிஜேபி மீது ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றசாட்டு எழுந்த விவகாரத்தில் நாட்டின் காவலாளியே ஒரு திருடன் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் காங்கிரஸ் கட்சி இதை முன் வைத்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இதையடுத்து பீகார் மாநிலத்தின்  சமஸ்திபூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல், காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என்று கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.