இதுக்கு அவங்க தான் காரணம்..! சரமாரியாக தாக்கப்பட்ட தொழிலாளர்கள்… தொண்டு நிறுவனம் பரபரப்பு புகார்..!!

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவன தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சிலர் சரமாரியாக சுட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை கொலை செய்யும் விதமாக தலீபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை ஆங்காங்கே புதைத்து வருகின்றனர். ஆனால் அவற்றால் பெரும்பாலும் மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் வெடிக்காத கண்ணிவெடிகளை தொண்டு நிறுவனங்கள் பல அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பாக்லானில் ஹாலோ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்காக முகாமிட்டு தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணி வெடிகளை அகற்றும் பணியை முடித்து விட்டு இரவில் முகாமிற்குள் தூங்க சென்ற ஹாலோ தொழிலாளர்களை துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் பலருக்கு இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஹாலோ தொண்டு நிறுவனம் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது தலீபான் பயங்கரவாதிகளாக தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *