செப்டம்பர் மாதம் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-2…!!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்த விண்கலம் கடந்த புதன்கிழமை அப்பாதையில் இருந்து விலகி  நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு நாளை மறுநாள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை  சென்றடைகிறது.

Image result for ரோவர் SATELLITE

ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து ரோவரை சுமந்துபடி நிலவில் லேண்டர் தரையிறங்குகிறது. அதன்பின் லேண்டரில் இருந்து ரோவர் கீழிறங்கி நிலவில் ஆய்வு செய்யும். இதனிடையே ஆர்பிட்டர் தனது பாதையில் இருந்தபடி ஓராண்டு காலம் முழுவதும் நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும், லேண்டர் மற்றும் ரோவர் தலா 14 நாட்கள் நிலவின் தரைப் பகுதியை ஆய்வு செய்யும்.