”நிலவின் 2_ஆவது புகைப்படம்” வெளியிட்டது சந்திராயன்-2 ..!!

தற்போது நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 நிலவை இரண்டாவது புகைப்படம் எடுத்திருக்கிறது.

 கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது.அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில் நிலவுக்கு சென்ற சந்திராயன்-2 வருகின்ற செப்டம்பர்  7_ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.