“சந்திராயன்-2″தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளது… இஸ்ரோ தலைவர் கருத்து..!!

சந்திராயன்-2 விண்கலம்  தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளதாக  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம்  2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

Image result for chandrayaan 2

இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி வந்த  சந்திராயன்-2 அவ்வவ்போது புவியின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன்-2 நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியது. முன்னதாகவே காலை 9.30 மணிக்கு நிலவின் வட்டப்பாதையை சந்திராயன்-2 அடையும் என்று கூறிய நிலையில் தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்ற தொடங்கி முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.

Image result for chandrayaan 2

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திராயன்-2 திட்டமிட்டபடி சென்று கொண்டு இருப்பதாகவும், நாளுக்கு நாள் அதன் பாதையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும் அவர் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இன்னும் சில நாட்களில் சந்திராயன்-2 வில் அடுத்தடுத்து 4 மாற்றங்கள் நிகழும் , பின் திட்டமிட்ட படி நிலவில் சந்திராயன்-2 இறங்கும் என்று தெரிவித்தார். மேலும் திருமணமான பெண் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செல்வது போல் சந்திராயன்-2 புவியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்கு மாறி சென்றுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.