சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிக பெரிய சாதனை என்று நாசா_வின் முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டிள்ளார்.
கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பள்ளங்கள் நன்றாக தெரிந்தது.

இந்நிலையில் சந்திரயான்-2 குறித்து நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் , இந்தியா வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.அடுத்த சில திங்களில்சந்திரயான் -2 நிலவுக்கு மிகமிக நெருக்கமாக சென்று விடும். அது செப்டம்பர் 6 ஆம் தேதி சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரை இறங்க இருப்பது மிகப்பெரும் சாதனை என்று அவர் பாராட்டியுள்ளார்.