முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு…..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் முன்னணி வகித்து வருவதால்  முதல்வர் பதவியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்தியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வந்த முன்னிலை நிலவரத்தின் படி ஆந்திர மாநிலத்தின் YSR  காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.இதனால் அங்கு ஆட்சிமாற்றம் ஏற்படுவதால் அங்கு முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.