தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 28-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல் மார்ச் ஒன்றாம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.